பாதுகாப்பு மையம்

உலகினரின் படைப்புத்திறன், அறிவு மற்றும் அன்றாட வாழ்வியல் தருணங்களைப் படமெடுத்துக் காட்சிப்படுத்த வேண்டும் என்பதே TikTok-இன் நோக்கமாகும். படைப்புத்திறன் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் உலகளாவிய சமூகமாக, இந்தச் சமூகத்தில் பயனர்கள் பாதுகாப்பாகவும் சௌகரிகமாகவும் உணர வேண்டும் என்பது முக்கியமானதாகும். எங்கள் கொள்கைகளும் கருவிகளும் நமது சமூகத்தை நேர்மறையானதாகவும், பாதுகாப்பானதாகவும் வளர்த்தெடுப்பதற்காக உருவாக்கப்பட்டவை. TikTok-ஐ வேடிக்கையானதாகவும் அனைவருக்கும் ஏற்றதாகவும் உருவாக்கும் இந்த நடவடிக்கைகளுக்குப் பயனர்கள் மதிப்பளித்து, கடைப்பிடிப்பார்கள் என்று நம்புகின்றோம்.