TikTok-ஐப் பற்றி

TikTok என்பது சிறிய மொபைல் வீடியோக்கள் பிரிவிற்கான உலகின் முன்னணித் தளமாகும். உலகனத்தினரின் அன்றாட வாழ்வில் இருக்கும் படைப்புத்திறன், அறிவு மற்றும் தருணங்களைப் படமெடுத்து, காட்சிப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாகும். TikTok மூலம் ஒவ்வொருவரும் தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்தி நேரடியாகப் படைப்பாளியாக மாறலாம், அத்துடன் பயனர்களின் வீடியோக்களின் மூலம் தங்கள் ஆர்வம் மற்றும் படைப்புத்திறனைப் பகிர ஆர்வமூட்டும் பயனர்கள் சமூகத்தைக் கட்டமைக்க உறுதிபூண்டுள்ளோம். பெய்ஜிங், பெர்லின், ஜகார்த்தா, லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், மாஸ்கோ, மும்பை, சாவ் பாலோ, சியோல், ஷாங்காய், சிங்கப்பூர் மற்றும் டோக்கியோ ஆகிய இடங்களில் TikTok அலுவலகங்கள் உள்ளன. 2018ஆம் ஆண்டில் உலகில் மிகவும் அதிகமாகப் பதிவிறக்கப்பட்ட செயலிகளில் ஒன்றாக TikTok இருந்தது. iOS மற்றும் Android பதிப்புகளில் உலகம் முழுவதும் TikTok கிடைக்கிறது.