பாதுகாப்பு மையம்

உலகத்தினரின் படைப்புத்திறன், அறிவு மற்றும் அன்றாட வாழ்க்கைத் தருணங்களைப் படமெடுத்து, காட்சிப்படுத்த வேண்டும் என்பதே TikTok-இன் நோக்கமாகும்.

படைப்பாற்றல் மற்றும் வெளிப்பாட்டை வளர்க்கும் உலகளாவிய சமூகமாக, பயனர்கள் இந்தச் சமூகத்தில் பாதுகாப்பாகவும் வசதியாகவும் உணர வேண்டியது அவசியம். நமது கொள்கைகளும் கருவிகளும் நமது சமூகத்திற்குச் சாதகமான மற்றும் பாதுகாப்பான சூழலை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளன, மேலும் பயனர்கள் TikTok-ஐ வேடிக்கையாகவும் அனைவருக்கும் ஏற்ற வகையிலும் வைத்திருக்க இந்த நடவடிக்கைகளை மதித்துப் பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறோம்.