பாதுகாப்பு மையம்

  • உங்கள் கணக்கைத் தனிப்பட்டதாக்குவதற்குத் தேர்ந்தெடுப்பது உங்களைப் பின்தொடர்பவர்களை அங்கீகரிக்கவோ அல்லது மறுக்கவோ அனுமதிக்கிறது, நீங்கள் பதிவேற்றிய உள்ளடக்கத்தைப் பின்தொடர்பவர்கள் மட்டும் பார்க்கும்படி செய்கிறது. எப்படி என்று அறிக
  • தனிப்பட்ட கணக்கு வசதி இருந்தாலும் சுயவிவரப் படம், பயனர் பெயர் மற்றும் சுயகுறிப்பு உள்ளிட்ட உங்கள் சுயவிவரத் தகவல்கள் எல்லாப் பயனர்களாலும் பார்க்க இயலும். உங்கள் சுயவிவரத்தில் தனிப்பட்ட தகவல்களைச் சேர்க்க வேண்டாம்; உங்கள் சுயவிவரப் பக்கத்தைத் திருத்துவதன் மூலம் அது ஆன்லைனுக்கு ஏற்ற வகையில் இருப்பதை உறுதிசெய்யலாம். எப்படி என்று அறிக
  • கணக்கு அமைப்புகள் நிலை விருப்பமான கட்டுப்பாட்டு முறையை இயக்குவதன் மூலம் எல்லாப் பார்வையாளர்களுக்கும் ஏற்றதாக இல்லாத உள்ளடக்கம் தோன்றுவதைக் கட்டுப்படுத்தலாம். எப்படி என்று அறிக
  • சில நேரங்களில் ஆன்லைனில் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இது உதவியாக இருக்கும். திரை நேர மேலாண்மை இயக்கப்பட்ட நிலையில், செயலியில் 2 மணிநேரம் மட்டும் செலவிட உங்களுக்கு உதவுவோம். எப்படி என்று அறிக
  • எந்தவொரு ஆன்லைன் கணக்கிற்கும் வலுவான கடவுச்சொல்லைத் தேர்வுசெய்வது, மூன்றாம் தரப்புத் தளங்கள் போன்றவற்றிலிருந்து உங்கள் கடவுச்சொல்லைப் பாதுகாப்பது மற்றும் பல்வேறு சேவைகளுக்கு வெவ்வேறு கடவுச்சொற்களைப் பயன்படுத்துவது நல்லவொரு விஷயமாகும். உங்கள் TikTok கணக்கு திருடப்பட்டிருப்பட்டிருக்கலாம் எனக் காட்டும் சந்தேகத்திற்குரிய நடத்தையை நீங்கள் கண்டால், உங்கள் கடவுச்சொல்லை மாற்றலாம் அல்லது எங்களைத் தொடர்புகொண்டு உதவியை நாடலாம். எப்படி என்று அறிக