வணக்கம் பெற்றோர்களே! TikTok-ஐப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும் தகவல்கள் மற்றும் வளங்களையும், செயலி மற்றும் சமூகத்தில் எவ்வாறு பதின்ம வயதினர் சிறப்பான அனுபவத்தைப் பெற உதவலாம் என்பதையும் இந்தப் பக்கத்தில் காணலாம்.
மேலும் பொதுவாக, உங்கள் பதின்ம வயது குழந்தை பயன்படுத்தும் ஒட்டுமொத்த ஆன்லைன் உபயோகத்தைக் கண்காணிக்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.இணையப் பாதுகாப்பு, ஆன்லைன் பின்பற்றும் அந்தரங்கள் (ஆன்லைன் பிரைவசி)மற்றும் அவர்களுக்குக் கிடைக்கும் ஆப்ஷன்கள் ஆகியவை குறித்து நீங்கள் ஆரம்பத்திலிருந்தே அவர்களுடன் பேசி புரிய வைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். உங்கள் வழிகாட்டுதல் அவர்களுக்கு இன்றியமையாதது!
TikTok என்றால் என்ன?
TikTok என்பது சிறிய மொபைல் வீடியோக்கள் பிரிவில் உலகின் முன்னணித் தளமாகும். மக்களுடையஅன்றாட வாழ்வில் இருக்கும் படைப்புத்திறன், அறிவு மற்றும் தருணங்களைப் படமெடுத்து, காட்சிப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாகும். TikTok மூலம் ஒவ்வொருவரும் தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்தி நேரடியாகப் படமெடுத்து ஒரு படைப்பாளியாக உருவாகலாம், அத்துடன் பயனர்களின் வீடியோக்களின் மூலம் தங்கள் ஆர்வம் மற்றும் படைப்புத்திறனைப் பகிர ஆர்வமூட்டும் பயனர்கள் சமூகத்தை உருவாக்கிப் பராமரிப்பதே எங்கள் நோக்கமாக இருக்கும்.
TikTok யாருக்கானது?
TikTok செயலி 13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் பயன்படுத்த உதவும். 13 வயது நிரம்பாத குழந்தைகளை செயலியைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்.
உங்கள் குழந்தையின் வயது 13-க்குள் இருந்து அவர் TikTok கணக்கில் பதிவுசெய்துள்ளதை நீங்கள் அறிந்தால், https://www.tiktok.com/legal/report/privacy முகவரியில் எங்களைத் தொடர்புகொண்டு அதனைத் தெரிவிக்கலாம். தேவையான நடவடிக்கையை நாங்கள் உடனடியாக மேற்கொள்வோம்.
பொருத்தமான பயன்பாட்டைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, எங்கள் சேவை விதிமுறைகள் மற்றும் சமூக வழிகாட்டுதல்களைப் பார்க்கவும்.
TikTok-ஐப் பதிவிறக்ககுவதிலிருந்து எனது பதின்ம வயது குழந்தையை நான் தடுக்க முடியுமா?
உங்கள் பதின்ம வயது குழந்தை பதிவிறக்கக்கூடிய செயலிகள் உட்பட அவர் மேற்கொள்ளும் இணைய தள உபயோகத்தை நீங்கள் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். iOS மற்றும் Android என இரண்டும் சாதனங்களில், சில செயலிகள், அம்சங்கள், திரைப்படங்கள் மற்றும் பலவற்றைத் தடுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் பெற்றோர் கட்டுப்பாடுகள் உள்ளன.
TikTok, 13 வயது மற்றும் அதற்கு மிகையான வயதுடயவர்கள் பயன்படுத்த முடியும் என்பதால், அதற்கு 12+ ஆப் ஸ்டோர் மதிப்பீட்டை அளித்துள்ளோம். இது குறிப்பிட்ட வயது பூர்த்தியடையாத குழந்தைகளுக்கு அவர்களின் மொபைலில் செயலியைத் தடுக்கும் வகையில் சாதன நிலையிலான பெற்றோர் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்த உங்களை அனுமதிக்கிறது.
பெற்றோர் கட்டுப்பாடுகள் (அல்லது ''கட்டுப்பாடுகள்') தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, Apple App Store அல்லது Google Play ஸ்டோர் வழிமுறைகளைப் பார்த்து, அவற்றை இயக்கவும்.
எனது பதின்ம வயதுக் குழந்தை பதிவு செய்துள்ள வீடியோக்களை யாரெல்லாம் பார்க்கலாம், அவர்களுக்குச் செய்திகளை அனுப்பலாம் என்பதைக் கட்டுப்படுத்த என் குழந்தை என்ன செய்ய வேண்டும்?
பயனர்கள் தங்கள் கணக்கைத் தனிப்பட்டதாக மாற்றுவதன் மூலம் யார் அவர்கள் பதிவேற்றிய உள்ளடக்கத்தைப் பார்க்கலாம், அவர்களைப் பின்தொடரலாம், அவர்களுக்குச் செய்திகளை அனுப்பலாம் என்பதைக் கட்டுப்படுத்தலாம். தனிப்பட்ட கணக்கு மூலம், பயனர்கள் பின்தொடர்பவர்களை அங்கீகரிக்கவோ அல்லது மறுக்கவோ முடியும் மற்றும் அவர்கள் செய்திருக்கும் பதிவுகள் மற்றும் அவர்களுக்கு வரும் செய்திகளை பின்தொடர்பவர்களுக்கு மட்டுமே தெரியும்படி கட்டுப்படுத்த முடியும்.
பயனரிடம் பொதுச் சுயவிவரம் இருந்தால், TikTok செயலில் உள்நுழைந்துள்ள யார் வேண்டுமானாலும் பயனரின் பொது வீடியோக்களைப் பார்க்கலாம். இருப்பினும், அனுமதிக்கப்பட்ட பின்தொடர்பவர்கள் மட்டுமே அந்தப் பயனருக்குச் செய்தியை அனுப்பலாம்.
பயனர்கள் பொது அல்லது தனிப்பட்ட கணக்கு என எதைக் கொண்டிருந்தாலும் அவர்களால் இதைச் செய்ய முடியும்:
- எப்போது வேண்டுமானாலும் அவர்களைத் தொடர்புகொள்வதிலிருந்து மற்றவர்களைத் தடுக்கலாம்
- வீடியோவைத் தனிப்பட்டதாகச் சேமிக்கலாம், அதனால் பிறர் அதனைப் பார்க்க முடியாது
- கருத்துகள், டூயட்கள் அல்லது செய்திகளில் கட்டுப்பாடுகளை புகுத்தலாம்
உங்கள் பதின்ம வயதுக் குழந்தை தனது TikTok அனுபவத்தைக் கட்டுப்படுத்த உதவும் கூடுதல் அமைப்புகளைத் தெரிந்துகொள்ள, எங்கள் கருவிகள் பக்கத்தைப் பார்க்கவும்.
நினைவில் இருக்கட்டும்: தனிப்பட்ட கணக்கு வசதி இருந்தாலும் சுயவிவரப் படம், பயனர் பெயர் மற்றும் சுயகுறிப்பு உள்ளிட்ட உங்கள் சொந்த அந்தரங்கதகவல்கள் எல்லாப் பயனர்களும் பார்க்க இயலும். உங்கள் பதின்ம வயதுக் குழந்தை தங்கள் சுயவிவரத்தில் வயது, முகவரி அல்லது மொபைல் எண் போன்ற தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தக்கூடாது என்று சொல்லி புரிய வைக்கவும்.
பொருத்தமற்ற உள்ளடக்கம் அல்லது நடத்தை மீது புகாரளிக்க என் பதின்ம வயதுக் குழந்தை என்ன செய்ய வேண்டும்?
எங்கள் சேவை விதிமுறைகளை மீறும் எதையாவது நீங்களோ அல்லது உங்கள் பதின்ம வயது குழந்தை பார்க்க நேர்ந்தால், அதன்மீது முறையான நடவடிக்கை எடுக்கும் வகையில் அதைக் குறித்துஎங்கள் மதிப்பாய்வாளர் குழுவிடம் புகாரளிக்கவும். செயலியில் இருந்தே பயனர்கள் ஒரு குறிப்பிட்ட வீடியோ, பயனர் அல்லது கருத்து மீதுபுகாரளிக்கலாம்.
மேலும், உங்கள் பதின்ம வயது குழந்தை குழந்தைமற்றவர்கள் தனது பதிவுகளை பார்ப்பதிலிருந்து அல்லது அவருக்குச் செய்திகளை அனுப்புவதிலிருந்து மற்றொரு பயனரைத் தடுக்கலாம்.