தனியுரிமை கொள்கை
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 2020
டிக்டாக்-க்கு (“தளம்”) வரவேற்கிறோம். தளம் டிக்டாக் புரொப்ரைட்டரி லிமிட்டெட் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது மற்றும் கட்டுப்படுத்தப்படுகிறது, நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட முகவரி 201 ஹெண்டெர்சன் ரோடு#06-22, அபெக்ஸ்@ஹெண்டெர்சன், சிங்கப்பூர் 159545 (“டிக்டாக்”, “நாங்கள்” அல்லது “எங்கள்”).
உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கவும் மதிக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். உங்களிடமிருந்து நாங்கள் சேகரிக்கும் அல்லது நீங்கள் எங்களுக்கு வழங்கும் தனிப்பட்ட தரவு தொடர்பான எங்களுடைய நடைமுறைகளை இந்தக் கொள்கை விளக்குகிறது. இந்தக் கொள்கையுடன் நீங்கள் உடன்படவில்லை என்றால், நீங்கள் தளத்தைப் பயன்படுத்தக்கூடாது.
உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து https://www.tiktok.com/legal/report/privacy என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.
சுருக்கம்
உங்களைப் பற்றி நாங்கள் என்னென்ன தகவல்களைச் சேகரிக்கிறோம்?
நீங்கள் ஒரு கணக்கை உருவாக்கி தளத்தில் உள்ளடக்கத்தை பதிவேற்றும்போது நீங்கள் எங்களுக்கு வழங்கும் தகவல்களை நாங்கள் சேகரித்து செயலாக்குகிறோம். உங்களால் தளம் பயன்படுத்தப்படுவது பற்றிய தொழில்நுட்ப மற்றும் நடத்தை தகவல்களும் இதில் அடங்கும். நீங்கள் ஒரு கணக்கை உருவாக்காமல் பயன்பாட்டை (ஆப்) பதிவிறக்கி, தளத்துடன் தொடர்பு கொண்டால் உங்களைப் பற்றிய தகவல்களையும் நாங்கள் சேகரிப்போம்.
உங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துவோம்?
நாங்கள் தளத்தை உங்களுக்கு வழங்கவும், அதை மேம்படுத்தி நிர்வகிக்கவும், உங்களின் தகவல்களைப் பயன்படுத்துவோம். நாங்கள் உங்கள் தகவல்களை மற்றவைகளுடன் பயன்படுத்தி, ‘ஃபார் யூ (உங்களுக்காக)’ ஊட்டத்தில் உங்களுக்காக பரிந்துரைகளை காண்பிப்போம், தளத்தை மேம்படுத்தி உருவாக்குவோம், மேலும் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம். பொருத்தமான இடங்களில் , உங்களின் இலக்கு விளம்பரங்களை வழங்கவும் , தளத்தை விளம்பரப்படுத்தவும் உங்கள் தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்துவோம்.
உங்கள் தகவல்களை நாங்கள் யாருடன் பகிர்ந்து கொள்கிறோம்?
மேகக்கணி (கிளவுட்) சேமிப்பக வழங்குநர்கள் போன்ற தளத்தை வழங்க எங்களுக்கு உதவும் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுடன் உங்கள் தரவை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். நாங்கள் வணிக பங்குதாரர்கள், டிக்டாக் போல அதே குழுவில் மற்ற நிறுவனங்கள், உள்ளடக்க மட்டுறுத்தல் சேவைகள், அளவீடு வழங்குநர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் பகுப்பாய்வு வழங்குநர்கள் ஆகியோருடனும் உங்களைப் பற்றிய தகவலை பகிர்ந்து கொள்வோம். மேலும் சட்டத்தால் தேவைப்படும் இடங்களில் மற்றும் தேவைப்படும் போது, நாங்கள் சட்ட அமலாக்க முகவர்கள் அல்லது கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் மூன்றாம் தரப்பினருடன் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தப்பட்ட ஒரு நீதிமன்ற உத்தரவு இணங்க உங்கள் தகவல்களை பகிர்ந்துகொள்வோம்.
உங்கள் தகவலை நாங்கள் எவ்வளவு காலம் வைத்திருப்போம்?
உங்களுக்கு சேவையை வழங்க வேண்டியது அவசியம் உள்ள வரை உங்கள் தகவல்களை நாங்கள் வைத்திருப்போம். நாங்கள் உங்களுக்கு சேவை வழங்கும் பொருட்டு உங்கள் தகவல்கள் எங்களுக்கு தேவைப்படாதபோது, அத்தகைய தரவை வைத்திருக்கும் ஒரு சட்டரீதியான வணிக நோக்கத்தை நாங்கள் கொண்டுள்ளவரை அல்லது நாங்கள் தரவை வைத்திருப்பதற்கான ஒரு சட்ட கட்டுப்பாடுக்கு நாங்கள் உட்படும் இடங்களில் மட்டும் உங்கள் தரவை வைத்திருப்போம். நிறுவனம், சட்டரீதியான செயல்முறை அல்லது பாதுகாப்பிற்கு அவசியப்படுகிறது அல்லது அவசியப்படும் என நாங்கள் நம்பும் வரையும் உங்கள் தரவை நாங்கள் வைத்திருப்போம்.
இந்தக் கொள்கையில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அதை எவ்வாறு உங்களுக்கு அறிவிப்போம்?
இந்த கொள்கையில் செய்யப்படும் எந்தவொரு பொருள் சார்ந்த மாற்றங்களையும் அனைத்து பயனர்களுக்கும் தளம் வழியாக வழங்கப்படும் ஒரு அறிவிப்பு மூலம் நாங்கள் பொதுவாக அறிவிப்போம். இருப்பினும், ஏதேனும் மாற்றங்களைச் சரிபார்க்க இந்தக் கொள்கையை நீங்கள் தவறாமல் பார்க்க வேண்டும். இந்தக் கொள்கையின் மேலே உள்ள “கடைசியாக புதுப்பிக்கப்பட்ட” தேதியையும் நாங்கள் புதுப்பிப்போம், இது அத்தகைய கொள்கையின் செயல்பாட்டு தேதியை பிரதிபலிக்கிறது. தளத்தை அணுகுவதன் மூலம் அல்லது பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் இந்தக் கொள்கையைப் படித்திருப்பதையும், உங்கள் தனிப்பட்ட தரவு தொடர்பான உங்கள் உரிமைகள், அதை நாங்கள் எவ்வாறு சேகரிப்பது, பயன்படுத்துவோம் மற்றும் செயலாக்குவோம் ஆகியவற்றை நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்பதையும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
***********************************************************************************************
1. நாங்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட தரவுகளின் வகைகள்
உங்களைப் பற்றிய பின்வரும் தகவல்களை நாங்கள் சேகரித்து பயன்படுத்துகிறோம்:
உங்கள் சுயவிவர தகவல்கள். உங்கள் பயனர்பெயர், பிறந்த தேதி (பொருந்தக்கூடிய இடங்களில்), மின்னஞ்சல் முகவரி மற்றும்/அல்லது தொலைபேசி எண், உங்கள் பயனர் சுயவிவரத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள தகவல்கள் மற்றும் உங்கள் புகைப்படம் அல்லது சுயவிவர வீடியோ உள்ளிட்ட தகவல்களை, தளங்களில் பதிவு செய்யும்போது எங்களுக்கு தருகிறீர்கள்.
பயனர் உள்ளடக்கம் மற்றும் நடத்தை தகவல்கள். நீங்கள் அமைக்கும் விருப்பத்தேர்வுகள் (மொழியின் தேர்வு போன்றவை), நீங்கள் பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் நீங்கள் அளிக்கும் கருத்துகள் (“பயனர் உள்ளடக்கம்”) உள்ளிட்ட, தளத்தில் நீங்கள் உருவாக்கும் உள்ளடக்கத்தை நாங்கள் செயலாக்குகிறோம். பயனர் உள்ளடக்கத்தின் பதிவேற்ற வேகத்தை மேம்படுத்துவதற்காக, பதிவேற்றத்தை உறுதிப்படுத்த “பதிவிடு” என்பதைக் கிளிக் செய்வதற்கு முன், முன்கூட்டியே ஆடியோ மற்றும் வீடியோவை பதிவேற்ற ஒரு முன்-ஏற்றுதல் சேவையை நாங்கள் வழங்குவோம். வேறு காரணங்களுக்காக நீங்கள் உள்ளடக்கத்தை ரத்துசெய்தால் அல்லது பதிவேற்றத் தவறினால், அதனுடன் தொடர்புடைய ஆடியோ மற்றும் வீடியோவை எங்கள் சேவையகத்திலிருந்து நீக்குவோம். நீங்கள் பங்கேற்கும் கருத்தாய்வுகள், சவால்களை மற்றும் போட்டிகள் மூலம் நாங்கள் தகவல்களை சேகரிப்போம். தளத்தை நீங்கள் பயன்படுத்துவது பற்றிய தகவல்களையும் நாங்கள் சேகரிக்கிறோம், எ.கா., நாங்கள் உங்களுக்குக் காண்பிக்கும் உள்ளடத்துடன் நீங்கள் எவ்வாறு தொடர்புகொள்கிறீர்கள், நீங்கள் பார்க்கும் விளம்பரங்கள், நீங்கள் பார்க்கும் வீடியோக்கள் மற்றும் எதிர்கொள்ளும் சிக்கல்கள், நீங்கள் விரும்பும் உள்ளடக்கம், ‘எனக்கு பிடித்தவை’-ல் நீங்கள் சேமிக்கும் உள்ளடக்கம் மற்றும் நீங்கள் பின்தொடரும் பயனர்கள் உள்ளிட்டவை. உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்குவதற்கான நோக்கத்திற்காக உங்கள் ஆர்வங்கள், பாலினம் மற்றும் வயது உள்ளிட்ட உங்கள் விருப்பங்களையும் நாங்கள் அனுமானிக்கிறோம் . உங்கள் உள்ளடக்கத்தைப் பிற பயனர்களுக்கு ஊக்குவிப்பதற்கும், உங்கள் சுயவிவரம் ஒத்துழைப்புக்கான கூடுதல் வாய்ப்புகளை அளிக்கிறதா என்பதை ஆராய்வதற்கும், உங்களைப் பின்தொடர்பவர்கள் , நீங்கள் பெறும் விருப்பங்கள் மற்றும் நீங்கள் பதிவேற்றும் உள்ளடக்கத்திற்கான பதில்கள் பற்றிய தகவல்களை நாங்கள் செயலாக்குகிறோம் . பொருத்தமான இடங்களில் , தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களுக்கு சேவை செய்வதற்கும் புதிய சேவைகள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றி உங்களுக்குச் சொல்வதற்கும் இந்த தகவலைப் பயன்படுத்துவோம்.
மூன்றாம் தரப்பினரிடமிருந்து பெறப்படும் தகவல்கள். மூன்றாம் தரப்பினரிடமிருந்து எங்களுடன் சில தகவல்களைக் தேர்வு செய்து பகிரலாம் அல்லது தளத்தின் பயன்பாட்டின் மூலம், நாங்கள் தானாகவே அத்தகைய மூன்றாம் தரப்பின் தரவைப் தானாக சேகரிக்கலாம். கீழே உள்ள மூன்றாம் தரப்பினரிடமிருந்து நாங்கள் பெறும் தகவல்கள் குறித்த கூடுதல் விவரங்களை நாங்கள் வழங்கியுள்ளோம்:
வணிக பங்குதாரர்கள்
உங்கள் சமூக ஊடக கணக்கு விவரங்களை (எ.கா., ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், கூகிள்) பயன்படுத்தி தளத்தைப் பயன்படுத்த பதிவுசெய்தால் , நீங்கள் எங்களுக்கு உங்கள் பயனர்பெயர் மற்றும் பொது சுயவிவரத்தை எங்களுக்கு வழங்குவீர்கள் அல்லது அவற்றை வழங்க உங்கள் சமுக ஊடகத்தை அனுமதிப்பீர்கள். உங்கள் பயன்பாட்டு (ஆப்) ஐடி, அணுகல் குறிப்பு (டோக்கன்) மற்றும் குறிப்பிடும் இணைப்பு (URL) போன்ற சில தகவல்களை உங்கள் சமூக ஊடகத்துடன் பகிர்ந்து கொள்வோம். உங்கள் ஃபேஸ்புக் தொடர்பு பட்டியலை எங்களுடன் பகிர்வது பற்றிய கூடுதல் தகவலுக்கு, தயவுசெய்து பிற பயனர்களைக் கண்டறிந்து உங்கள் நண்பர்களை அழைக்கவும் எஎன்பதை பார்க்கவும்.
விளம்பரதாரர்கள் மற்றும் விளம்பர கூட்டமைப்புகள்
நாங்கள் மிகப் பொருத்தமான விளம்பரங்களை உங்களுக்கு வழங்க, உங்கள் ஆர்வங்களை அனுமானிக்கும் பொருட்டு, உங்களிடமிருந்து சேகரிக்கப்ப்பட்ட தகவல்கள் மற்றும் தளம் மற்றும் பிற மூன்றாம் தரப்பு தளங்கள் உடனான உங்கள் ஈடுபாடு ஆகியவற்றை பயன்படுத்துகிறோம். இந்தத் தகவல்கள் நீங்கள் பார்வையிட்ட வலைத்தளங்கள், நீங்கள் பதிவிறக்கிய பயன்பாடுகள் மற்றும் நீங்கள் செய்த கொள்முதல் ஆகியவற்றைப் பற்றி சொல்கிறது , இதன் மூலம் எதிர்காலத்தில் உங்களுக்கு வேறு என்ன ஆர்வம் இருக்கும் என்பதை நாங்கள் கணிக்க முடியும், மேலும் எங்கள் தளத்தின் விளம்பரம் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை மதிப்பிடலாம். எங்கள் பயன்பாட்டில் குக்கீகள் மற்றும் ஒத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், எங்கள் தளத்தில் விளம்பரம் செய்யும் மூன்றாம் தரப்பினரிடமிருந்தும், நீங்கள் பார்வையிடும் தளங்களிடமிருந்தும் பெறப்பட்ட தகவல்களிலிருந்தும் இந்த தகவலை நாங்கள் சேகரிக்கிறோம்.
உங்களைப் பற்றி நாங்கள் சேகரிக்கும் தொழில்நுட்ப தகவல்கள். கணக்கு இல்லாமல் பயன்பாட்டைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் நீங்கள் தளத்தைப் பயன்படுத்தும் போது உங்களிடமிருந்து சில தகவல்களை நாங்கள் தானாகவே சேகரிப்போம் . இதுபோன்ற தகவல்களில் உங்கள் ஐபி முகவரி, உலாவல் வரலாறு (அதாவது நீங்கள் தளத்தில் பார்த்த உள்ளடக்கம்), மொபைல் கேரியர், நேர மண்டல அமைப்புகள், விளம்பர நோக்கங்களுக்கான அடையாளங்காட்டி மற்றும் நீங்கள் பயன்படுத்தும் பயன்பாட்டின் பதிப்பு ஆகியவை அடங்கும். உங்கள் சாதனத்தின் மாதிரி, சாதன அமைப்பு, பிணைய வகை, சாதன ஐடி, உங்கள் திரை தெளிவுதிறன் மற்றும் இயங்குதளம் போன்ற தளத்தை அணுக நீங்கள் பயன்படுத்தும் சாதனம் பற்றிய தகவல்களையும் நாங்கள் சேகரிப்போம். பல சாதனங்களிலிருந்து நீங்கள் உள்நுழையும்போது, சாதனங்களில் உங்கள் செயல்பாட்டை அடையாளம் காண உங்கள் சுயவிவரத் தகவலை நாங்கள் பயன்படுத்த முடியும்.
இருப்பிடம். இருப்பிட அடிப்படையிலான சேவைகளை நாங்கள் வழங்கும் இடத்தைத் தவிர்த்து, உங்கள் டிக்டோக் அனுபவத்தைத் தனிப்பயனாக்க அமைப்புகளில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் 'பிராந்தியம்' என்பதை பயன்படுத்துகிறோம், இந்த விஷயத்தில் நாங்கள் ஜிபிஎஸ்-ஐ (உங்கள் ஒப்புதல் எங்களிடம் உள்ளவை) சேகரிக்கிறோம்.
பிற பயனர்களைக் கண்டுபிடித்து உங்கள் நண்பர்களை அழைத்தல். எங்கள் 'நண்பர்களைக் கண்டறி' செயல்பாட்டைப் பயன்படுத்தி தளத்தின் பிற பயனர்களைக் கண்டுபிடிக்கலாமா என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம். இந்த செயல்பாடு உங்கள் தொலைபேசியின் தொடர்பு பட்டியல் அல்லது ஃபேஸ்புக் நண்பர்கள் பட்டியலில் உள்ள உங்கள் நண்பர்களில் யார் தளத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதைக் காண உங்களை அனுமதிக்கிறது, மேலும் அவர்களைப் பின்தொடர்வதற்கான விருப்பத்தையும் உங்களுக்கு வழங்குகிறது. தளத்தில் உங்களுடன் சேரும்படி உங்கள் தொடர்புகளை அழைக்க இந்த செயல்பாட்டைப் பயன்படுத்தலாம் . உங்கள் தொலைபேசியின் தொடர்பு பட்டியல் அல்லது ஃபேஸ்புக் நண்பர்கள் பட்டியலில் இருந்து அந்த நபருக்கான தொடர்புத் தகவலை நாங்கள் பயன்படுத்துவோம், மேலும் அவர்களுக்கு ஒரு எஸ்எம்எஸ், மின்னஞ்சல் அல்லது மூன்றாம் தரப்பு செய்தி (வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் (ஃபேஸ்புக் மெசஞ்சர் உட்பட) அனுப்புவதற்கான விருப்பத்தை உங்களுக்கு வழங்குவோம்.) அல்லது ட்விட்டர் போன்றவை) உங்கள் டிக்டாக் சுயவிவரத்தைக் காண அவர்களை அழைக்கிறது.
நாணயங்களை வாங்குதல். பயன்பாட்டு நாணயம் வாங்குதல்களை வழங்கும் சில அதிகார வரம்புள்ள பகுதிகளில் நீங்கள் வசிக்கிறீர்கள் என்றால், எங்கள் மெய்நிகர் உருப்படிகள் கொள்கையின். விதிகளை கவனியுங்கள். உங்கள் கொள்முதல் உங்கள் ஆப்பிள் ஐடியூன்ஸ் அல்லது கூகிள் பிளே கணக்கு வழியாக செய்யப்படும் . அத்தகைய பரிவர்த்தனை தொடர்பாக உங்களிடமிருந்து எந்தவொரு நிதி அல்லது பில்லிங் தகவலையும் நாங்கள் சேகரிக்கவில்லை. அத்தகைய தரவைக் கையாள்வது தொடர்பாக தொடர்புடைய பயன்பாட்டு ஸ்டோரின் விதிமுறைகளையும் அறிவிப்புகளையும் மதிப்பாய்வு செய்யவும். நாணயங்களில் சரியான மதிப்பைக் கொண்டு உங்கள் கணக்கில் நாங்கள் வரவு வைக்க முடியும், நீங்கள் செய்த கொள்முதல், அந்த கொள்முதல் செய்யும் நேரம் மற்றும் செலவழித்த தொகை ஆகியவற்றின் பதிவை நாங்கள் வைத்திருப்போம்.
2. குக்கீகள்
நாங்கள் மற்றும் எங்கள் விற்பனையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் குக்கீகள் மற்றும் பிற ஒத்த தொழில்நுட்பங்களை (எ.கா., வலை பீக்கான்கள், ஃபிளாஷ் குக்கீகள் போன்றவை) (“குக்கீகள்”) தானாகவே தகவல்களைச் சேகரிக்கவும், நீங்கள் எந்த வலைப்பக்கங்களைக் கிளிக் செய்கிறீர்கள், எப்படி தளத்தை பயன்படுத்துகிறீர்கள் என்பதை அளவிடவும் பகுப்பாய்வு செய்யவும் தளத்தைப் பயன்படுத்தி உங்கள் அனுபவத்தை மேம்படுத்தவும், எங்கள் சேவைகளை மேம்படுத்தவும், தளத்தில் மற்றும் உங்கள் வெவ்வேறு சாதனங்களில் பிற இடங்களில் இலக்கு விளம்பரங்களை உங்களுக்கு வழங்கவும் பயன்படுத்துகிறோம். குக்கீகள் என்பவை சிறிய கோப்புகள், அவை உங்கள் சாதனத்தில் வைக்கப்படும் போது, சில அம்சங்களையும் செயல்பாட்டையும் வழங்க தளத்தை இயக்கும். வலை பீக்கான்கள் என்பவை மிகச் சிறிய படங்கள் அல்லது படங்களில் பதிக்கப்பட்ட சிறிய தரவுத் துண்டுகள், அவை “பிக்சல் குறிச்சொற்கள்” அல்லது “தெளிவான GIFகள்” என்றும் அழைக்கப்படுகின்றன, அவை குக்கீகளை அடையாளம் காணக்கூடியவை, ஒரு பக்கம் பார்க்கப்படும் நேரம் மற்றும் தேதி, பிக்சல் குறிச்சொல் இருக்கும் பக்கத்தின் விளக்கம், உங்கள் கணினி அல்லது சாதனத்தில் உள்ளது ஒத்த தகவல்கள் ஆகியவற்றையும் அடையாளம் காண்கின்றன. தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.
கூடுதலாக, எங்கள் வணிக பங்குதாரர்கள், விளம்பர கூட்டமைப்புகள் மற்றும் பிற விளம்பர விற்பனையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் (பகுப்பாய்வு விற்பனையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் உட்பட) உங்கள் ஆன்லைன் செயல்பாடுகள் குறித்த தகவல்களை குக்கீகள் மூலம் சேகரிக்க அனுமதிக்கிறோம். உங்கள் மின்னஞ்சல் அல்லது பிற உள்நுழைவு அல்லது சாதனத் தகவலைப் பயன்படுத்தி, உங்கள் எல்லா சாதனங்களிலும் எங்கள் தளத்திலுள்ள உங்கள் செயல்பாட்டுடன் உங்கள் தொடர்பு அல்லது சந்தாதாரர் தகவலை இணைக்கிறோம். உங்கள் விருப்பங்கள், விருப்பத்தேர்வுகள் மற்றும் பண்புகளுக்கு ஏற்ப எங்கள் தளத்திலும் பிற இடங்களிலும் விளம்பரங்களைக் காண்பிக்க இந்த மூன்றாம் தரப்பினர் இந்த தகவலைப் பயன்படுத்தலாம். இந்த மூன்றாம் தரப்பினரின் தனியுரிமை நடைமுறைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல, மேலும் இந்த மூன்றாம் தரப்பினரின் தகவல் நடைமுறைகள் இந்த கொள்கையில் உள்ளடக்கப்படவில்லை.
உங்கள் உலாவி அமைப்புகளை சரிசெய்வதன் மூலம் குக்கீகளை நீங்கள் மறுக்கலாம் அல்லது முடக்கலாம். ஒவ்வொரு உலாவியும் வித்தியாசமாக இருப்பதால், உங்கள் உலாவி வழங்கும் வழிமுறைகளைப் பாருங்கள். சில வகையான குக்கீகளை மறுக்க அல்லது முடக்க கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். எடுத்துக்காட்டாக, உலாவிகள் மற்றும் மொபைல் பயன்பாடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதில் உள்ள வேறுபாடுகள் காரணமாக, ஒரு உலாவியில் இலக்கு விளம்பரத்திற்காகப் பயன்படுத்தப்படும் குக்கீகளை விலக்கிக் கொள்ளவும், மொபைல் பயன்பாட்டிற்கான இலக்கு விளம்பரத்திலிருந்து விலகவும் நீங்கள் வெவ்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கலாம், இவற்றை நீங்கள் உங்கள் சாதன அமைப்புகள் அல்லது மொபைல் பயன்பாட்டு அனுமதிகள் மூலம் கட்டுப்படுத்தலாம். கூடுதலாக, உங்கள் விலகல் தேர்வு நீங்கள் விலகும்போது பயன்படுத்தும் குறிப்பிட்ட உலாவி அல்லது சாதனத்திற்கு பிரத்தியேகமாக இருக்கும், இதனால் ஒவ்வொரு உலாவிக்கும் அல்லது சாதனத்திற்கும் நீங்கள் தனித்தனியாக விலக வேண்டியிருக்கும். குக்கீகளை மறுக்க, முடக்க அல்லது நீக்க நீங்கள் தேர்வுசெய்தால், அதன் பிறகு தளத்தின் சில செயல்பாடுகள் உங்களுக்கு கிடைக்காது.
3. உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்
உங்களைப் பற்றி நாங்கள் சேகரிக்கும் தகவல்களை பின்வரும் வழிகளில் பயன்படுத்துவோம்:
- எங்கள் சேவையில் மாற்றங்கள் குறித்து உங்களுக்கு அறிவித்தல்;
- பயனர் ஆதரவை உங்களுக்கு வழங்குதல்;
- நீங்கள் பெறும் உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்குதல் மற்றும் உங்களுக்கு பிடித்த வகையில் வடிவமைக்கப்பட்ட உள்ளடக்கத்தை உங்களுக்கு வழங்குதல்;
- பயனர் உள்ளடக்கத்தைப் பகிரவும் பிற பயனர்களுடன் தொடர்பு கொள்ளவும் உங்களை அனுமதித்தல்;
- இந்தச் செயல்பாட்டைப் பயன்படுத்த நீங்கள் தேர்வுசெய்தால், எங்கள் செய்தி அனுப்பும் சேவையைச் செயல்படுத்துதல் ;
- மெய்நிகர் உருப்படிகள் திட்டத்தில் பங்கேற்க உங்களை அனுமதித்தல்;
- தளத்தில் உள்ள துஷ்பிரயோகம், மோசடி மற்றும் சட்டவிரோத செயல்பாட்டைக் கண்டறிந்து உங்களுக்கு தெரிவித்தல்;
- எங்கள் சமூக வழிகாட்டுதல் மற்றும் வேறு தவறான உள்ளடக்கம் ஆகியவற்றின் மீறலுக்காக பயனர் உள்ளடக்கம், செய்திகள் மற்றும் தொடர்புடைய மீத்தரவு ஆகியவற்றை மறுஆய்வு செய்தல் உள்ளிட்ட உங்கள் பாதுகாப்பு மற்றும் இடர்காப்பை உறுதிசெய்தல்;
- உங்களுக்கும் உங்கள் சாதனத்திற்கும் உள்ளடக்கம் மிகவும் பயனுள்ள முறையில் வழங்கப்படுவதை உறுதிசெய்தல் ;
- தளத்தை மேம்படுத்துதல், முன்னேற்றுதல் மற்றும் சீர்திருத்துதல் மற்றும் தளத்தில் பிரபலமான தலைப்புகள், ஹேஷ்டேக்குகள் மற்றும் பிரச்சாரங்களை ஊக்குவித்தல்;
- தரவு பகுப்பாய்வை மேற்கொண்டு, அதன் நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த தளத்தை சோதித்தல்;
- தளத்தின் ஊடாடும் அம்சங்களில் பங்கேற்க உங்களை அனுமதித்தல்;
- தளத்தில் சமூகமயமாக்க உங்களை அனுமதித்தல், எடுத்துக்காட்டாக, "பிற நண்பர்களைக் கண்டறி" செயல்பாடு வழியாக அல்லது அவர்களின் தொலைபேசி தொடர்புகள் மூலம் உங்களை அடையாளம் காண மற்ற பயனர்களை அனுமதிப்பதன் மூலம் ;
- எங்கள் தளத்தைப் பயன்படுத்தும் அளவுக்கு உங்களுக்கு வயதுள்ளதை உறுதிப்படுத்துதல் (சட்டப்படி).
- தனிப்படுத்தப்பட்ட விளம்பரங்களை உங்களுக்கு வழங்குதல்;
- இருப்பிட அடிப்படையிலான சேவைகளை உங்களுக்கு வழங்குதல் (அந்த சேவைகள் உங்கள் அதிகார வரம்புப் பகுதியில் கிடைக்கின்றன);
- எங்கள் விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்துதல்; மற்றும்
- சரிசெய்தல் உள்ளிட்டு தளத்தை நிர்வகித்தல்.
4. உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பகிர்ந்து கொள்ளும் முறை
பின்வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாம் தரப்பினருடன் உங்கள் தரவை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்:
வணிக பங்குதாரர்கள்
உங்கள் சமூக ஊடக கணக்கு விவரங்களை (எ.கா., ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், கூகிள்) பயன்படுத்தி தளத்தைப் பயன்படுத்த பதிவுசெய்தால் , நீங்கள் எங்களுக்கு உங்கள் பயனர்பெயர் மற்றும் பொது சுயவிவரத்தை எங்களுக்கு வழங்குவீர்கள் அல்லது அவற்றை வழங்க உங்கள் சமுக ஊடகத்தை அனுமதிப்பீர்கள். உங்கள் பயன்பாட்டு (ஆப்) ஐடி, அணுகல் குறிப்பு (டோக்கன்) மற்றும் குறிப்பிடும் இணைப்பு (URL) போன்ற சில தகவல்களை உங்கள் சமூக ஊடகத்துடன் பகிர்ந்து கொள்வோம்.
சமூக ஊடக தளங்களில் உள்ளடக்கத்தைப் பகிர நீங்கள் தேர்வுசெய்தால், வீடியோ, பயனர்பெயர் மற்றும் அதனுடன் கூடிய உரை அந்த தளத்தில் பகிரப்படும் அல்லது, வாட்ஸ்அப் போன்ற உடனடி செய்தி தளங்கள் வழியாக பகிரும்போது, உள்ளடக்கத்திற்கான இணைப்பு பகிரப்படும்.
கட்டண வழங்குநர்கள்
நாணயங்களை வாங்குவதை நீங்கள் தேர்வுசெய்தால், இந்த பரிவர்த்தனைக்கு வசதியாக தரவை தொடர்புடைய கட்டண வழங்குநருடன் பகிர்ந்து கொள்வோம். நீங்கள் பணம் செலுத்தியவுடன் உங்களை அடையாளம் காணவும், உங்கள் கணக்கை நாணயங்களில் சரியான மதிப்புடன் வரவு வைக்கவும் நாங்கள் ஒரு பரிவர்த்தனை ஐடியைப் பகிர்ந்து கொள்கிறோம்.
சேவை வழங்குநர்கள்
தளத்தில் ஒரு பாதுகாப்பான மற்றும் சுவாரசியமான இடமாக இருப்பதை உறுதிசெய்ய கிளவுட் சேவை வழங்குநர்கள் மற்றும் உள்ளடக்க மட்டுறுத்தல் சேவைகளை வழங்குபவர்கள் போன்ற எங்கள் வணிகத்தை ஆதரிக்கும் சேவை வழங்குநர்களுக்கு நாங்கள் தகவலையும் உள்ளடக்கத்தையும் வழங்குகிறோம் .
பகுப்பாய்வு வழங்குநர்கள்
தளத்தின் தேர்வுமுறை மற்றும் மேம்பாட்டில் எங்களுக்கு உதவ பகுப்பாய்வு வழங்குநர்களைப் பயன்படுத்துகிறோம். எங்கள் மூன்றாம் தரப்பு பகுப்பாய்வு வழங்குநர்களும் இலக்கு விளம்பரங்களை வழங்க எங்களுக்கு உதவுகிறார்கள்
விளம்பரதாரர்கள் மற்றும் விளம்பர கூட்டமைப்புகள்
தளத்தின் எத்தனை பயனர்கள் மற்றும் எந்த பயனர்கள் ஒரு விளம்பரத்தை பார்த்தார்கள் அல்லது கிளிக் செய்தார்கள் என்பதைக் காண்பிப்பதற்காக விளம்பரதாரர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு அளவீட்டு நிறுவனங்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறோம். உங்கள் சாதன ஐடியை அளவீட்டு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம், இதன்மூலம் தளத்தில் உங்கள் செயல்பாட்டை பிற வலைத்தளங்களில் உங்கள் செயல்பாட்டுடன் இணைக்க முடியும்; உங்களுக்கு பிடித்த விளம்பரங்களைக் காண்பிக்க இந்த தகவலைப் பயன்படுத்துகிறோம்.
எங்கள் கார்ப்பரேட் குழு
தளத்தை மேம்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல், , சட்டவிரோத பயன்பாட்டை தடுத்தல் மற்றும் பயனர்களுக்கு ஆதரவளித்தல் உட்பட்டவற்றை தளத்தில் வழங்க உங்கள் தகவல்களை மற்ற உறுப்பினர்கள் , துணை நிறுவனங்கள் அல்லது எங்கள் கார்ப்பரேட் குழுவின் இணை உறுப்பினர்கள் ஆகியோருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
சட்ட அமலாக்கம்
சட்டப்பூர்வமாக செய்ய வேண்டியிருந்தால், அல்லது அத்தகைய பயன்பாடு நியாயமான முறையில் பின்வரும்படி தேவைப்பட்டால், நாங்கள் உங்கள் தகவல்களை சட்ட அமலாக்க முகமைகள், பொது அதிகாரிகள் அல்லது பிற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வோம்:
- சட்டபூர்வமான கடமை, செயல்முறை அல்லது கோரிக்கைக்கு இணங்குதல்;
- எங்கள் சேவை விதிமுறைகள் மற்றும் பிற ஒப்பந்தங்கள், கொள்கைகள் மற்றும் அது தொடர்பான உரிமைமீறல் குறித்து விசாரணை உள்பட்டவற்றை செயல்படுத்துதல்;
- பாதுகாப்பு, மோசடி அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களை கண்டறிதல், தடுத்தல் அல்லது கருத்தில் கொள்ளுதல்; அல்லது
- சட்டத்தால் தேவைப்படும் அல்லது அனுமதிக்கப்படும் வகையில் எங்கள், எங்கள் பயனர்கள், ஒரு மூன்றாம் தரப்பு அல்லது பொதுமக்கள் ஆகியோரின் உரிமைகள், சொத்துகள் அல்லது பாதுகாவல் ஆகியவற்றை பாதுகாத்தல் (மோசடி பாதுகாப்பு மற்றும் கடன் இடர்பாட்டு குறைப்பு ஆகிய நோக்கங்களுக்காக மற்ற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் தகவலைப் பரிமாறிக்கொள்ளுதல் உட்பட).
பொது சுயவிவரங்கள்
உங்கள் சுயவிவரம் பொதுவில் இருந்தால், உங்கள் உள்ளடக்கம் தளத்தில் உள்ள எவருக்கும் தெரியும், மேலும் உங்கள் நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் மற்றும் தேடுபொறிகள், உள்ளடக்க திரட்டிகள் மற்றும் செய்தி தளங்கள் போன்ற மூன்றாம் தரப்பினரால் அணுகப்படலாம் அல்லது பகிரப்படலாம். ஒவ்வொரு முறையும் வீடியோவைப் பதிவேற்றும் போது யார் வீடியோவைப் பார்க்க முடியும் என்பதை நீங்கள் மாற்றலாம். மாற்றாக, “எனது கணக்கை நிர்வகி” அமைப்புகளில் உங்கள் அமைப்புகளை 'தனிப்பட்ட கணக்கு' என மாற்றுவதன் மூலம் உங்கள் சுயவிவரத்தை இயல்புநிலையாக தனிப்பட்டதாக மாற்றலாம்.
விற்பனை அல்லது ஒன்றிணைப்பு
உங்கள் தகவல்களை நாங்கள் மூன்றாம் தரப்பினருக்கும் வெளியிடுவோம்:
- நாங்கள் ஏதேனும் வணிகம் அல்லது சொத்துக்களை விற்கவோ அல்லது வாங்கவோ செய்யும்போது (கணக்கை தீர்த்துக்கட்டுதல், திவாலாகுதல் அல்லது பிற நிகழ்வுகளின் விளைவாக), நாங்கள் அத்தகைய வணிகம் அல்லது சொத்துகளின் வருங்கால விற்பவர் அல்லது வாங்குபவரிடம் உங்கள் தரவை வெளியிடுவோம்; அல்லது
- நாங்கள் பிற நிறுவனங்களுடன் அல்லது வணிகங்களுடன் விற்றால், வாங்கினால், ஒன்றிணைத்தால், பெறப்பட்டால், அல்லது பங்குதாரராக ஆனால், அல்லது எங்கள் சொத்துக்களில் சிலவற்றை அல்லது அனைத்தையும் விற்றால். அத்தகைய பரிவர்த்தனைகளில், பரிமாற்றப்பட்ட சொத்துகளில் பயனர் தகவல்கள் இருக்கலாம்.
5. உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் சேமிக்கும் இடம்
உங்களிடமிருந்து நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தரவு நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு வெளியே சிங்கப்பூர் அல்லது அமெரிக்காவில் அமைந்துள்ள சேவையகத்தில் சேமிக்கப்படலாம். எங்கள் சேவைகளை உலகளவில் மற்றும் தொடர்ச்சியாக உங்களுக்குக் கொண்டுவருவதற்காக உலகெங்கிலும் உள்ள முக்கிய சேவையகங்களை நாங்கள் பராமரிக்கிறோம்.
6. உங்கள் தேர்வுகள்
டிக்டாக்கில் உள்நுழைவதன் மூலம் உங்கள் சுயவிவரத் தகவல்களை அணுகலாம் மற்றும் திருத்தலாம். நீங்கள் பதிவேற்றிய பயனர் உள்ளடக்கத்தை நீக்கலாம். உங்கள் வீடியோக்களைக் காணக்கூடிய, உங்களுக்கு செய்திகளை அனுப்பக்கூடிய அல்லது உங்கள் வீடியோக்களுக்கு கருத்துகளை பதிவிடக்கூடிய பலவற்றைக் கட்டுப்படுத்த உங்களை அனுமதிக்கும் பல கருவிகளையும் நாங்கள் அமைப்புகளில் வழங்குகிறோம். அவ்வாறு செய்வதை நீங்கள் தேர்வுசெய்தால், அமைப்புகளில் உங்கள் ஒட்டுமொத்த கணக்கையும் நீக்கலாம். அந்த கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், அல்லது நீங்கள் வாழும் நாட்டில் உங்களுக்கு ஏதேனும் உரிமைகள் இருப்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், தயவுசெய்து எங்களை https://www.tiktok.com/legal/report/privacy என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
7. உங்கள் தனிப்பட்ட தரவின் பாதுகாப்பு
உங்கள் தகவல் பாதுகாப்பாகவும் இந்த கொள்கைக்கு இணங்கவும் நடத்தப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, இணையம் வழியாக செய்யப்படும் தகவல் பரிமாற்றம் முற்றிலும் பாதுகாப்பானது அல்ல. உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பாதுகாப்போம் என்றாலும், எடுத்துக்காட்டாக, குறியாக்கத்தின் மூலம், தளம் வழியாக அனுப்பப்படும் உங்கள் தகவலின் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது; எந்தவொரு பரிமாற்றமும் உங்கள் சொந்த ஆபத்தில் உள்ளது.
உங்களுடைய மற்றும் பிற பயனர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான மாறுபட்ட சாத்தியக்கூறுகள் மற்றும் தீவிரத்தன்மை ஆகியவற்றின் அபாயத்திற்கு ஏற்ற அளவிலான பாதுகாப்பை உறுதிப்படுத்த பொருத்தமான தொழில்நுட்ப மற்றும் நிறுவன நடவடிக்கைகள் எங்களிடம் உள்ளன. இந்த தொழில்நுட்ப மற்றும் நிறுவன நடவடிக்கைகளை நாங்கள் பராமரிக்கிறோம், எங்கள் அமைப்புகளின் ஒட்டுமொத்த பாதுகாப்பை மேம்படுத்த அவ்வப்போது அவற்றை திருத்துவோம்.
எங்கள் பங்குதாரர் கூட்டமைப்புகள், விளம்பரதாரர்கள் மற்றும் இணை நிறுவனங்களின் வலைத்தளங்களுக்கான இணைப்புகளை அவ்வப்போது நாங்கள் சேர்ப்போம். இந்த வலைத்தளங்களில் ஏதேனும் ஒரு இணைப்பை நீங்கள் பின்தொடர்ந்தால், இந்த வலைத்தளங்களுக்கு அவற்றின் சொந்த தனியுரிமைக் கொள்கைகள் உள்ளன என்பதையும், இந்தக் கொள்கைகளுக்கான எந்தவொரு பொறுப்பையும் உத்தரவாதத்தையும் நாங்கள் ஏற்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவும். இந்த வலைத்தளங்களுக்கு நீங்கள் எந்த தகவலையும் சமர்ப்பிக்கும் முன் இந்த கொள்கைகளை சரிபார்க்கவும்.
8. உங்கள் தனிப்பட்ட தரவை எவ்வளவு காலம் வைத்திருப்போம்
உங்களுக்கு சேவையை வழங்க வேண்டியது அவசியம் உள்ள வரை உங்கள் தகவல்களை நாங்கள் வைத்திருப்போம். நாங்கள் உங்களுக்கு சேவை வழங்கும் பொருட்டு உங்கள் தகவல்கள் எங்களுக்கு தேவைப்படாதபோது, அத்தகைய தரவை வைத்திருக்கும் ஒரு சட்டரீதியான வணிக நோக்கத்தை நாங்கள் கொண்டுள்ளவரை மட்டும் உங்கள் தரவை வைத்திருப்போம். இருப்பினும், நாங்கள் தரவை வைத்திருப்பதற்கான ஒரு சட்ட கட்டுப்பாடுக்கு நாங்கள் உட்படும் இடங்களில் அல்லது நிறுவனம், சட்டரீதியான செயல்முறை அல்லது பாதுகாப்பிற்கு அவசியப்படுகிறது என நாங்கள் நம்பும் இடங்களில் உங்கள் தரவை வைத்திருப்போம்.
எங்கள் தளத்தைப் பயன்படுத்துவதை நீங்கள் நிறுத்திய பிறகு, உங்கள் தகவலை ஒரு ஒன்றுசேர்ந்த மற்றும் அநாமதேய வடிவத்தில் சேமிக்கிறோம்.
9. குழந்தைகள் தொடர்பான தகவல்கள்
டிக்டாக் 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்றதில்லை. சில சந்தர்ப்பங்களில் உள்ளூர் ஒழுங்குமுறை தேவைகள் காரணமாக இந்த வயது அதிகமாக இருக்கலாம், மேலும் தகவலுக்கு உங்கள் உள்ளூர் தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும். சம்பந்தப்பட்ட வயதிற்குட்பட்ட குழந்தையைப் பற்றிய அல்லது சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவு எங்களிடம் இருப்பதாக நீங்கள் நினைத்தால், தயவுசெய்து எங்களை https://www.tiktok.com/legal/report/privacy என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
10. புகார்கள்
உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எவ்வாறு செயலாக்குகிறோம் என்பது குறித்து நீங்கள் புகார் அளிக்க விரும்பினால், தயவுசெய்து எங்களை முதலில் https://www.tiktok.com/legal/report/privacy என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள், உங்கள் கோரிக்கையை விரைவில் கையாள நாங்கள் முயற்சிப்போம். இது தொடர்பான தரவு பாதுகாப்பு ஆணையத்திடம் ஒரு கோரிக்கையை மேற்கொள்ளும் உங்கள் உரிமைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
11. மாற்றங்கள்
இந்த கொள்கையில் செய்யப்படும் எந்தவொரு பொருள் சார்ந்த மாற்றங்களையும் அனைத்து பயனர்களுக்கும் தளம் வழியாக வழங்கப்படும் ஒரு அறிவிப்பு மூலம் நாங்கள் பொதுவாக அறிவிப்போம். இருப்பினும், ஏதேனும் மாற்றங்களைச் சரிபார்க்க இந்தக் கொள்கையை நீங்கள் தவறாமல் பார்க்க வேண்டும். இந்தக் கொள்கையின் மேலே உள்ள “கடைசியாக புதுப்பிக்கப்பட்ட” தேதியையும் நாங்கள் புதுப்பிப்போம், இது அத்தகைய கொள்கையின் செயல்பாட்டு தேதியை பிரதிபலிக்கிறது. புதுப்பிக்கப்பட்ட கொள்கையின் தேதி புதுப்பிக்கப்பட்ட கொள்கைக்கான உங்கள் ஒப்புதலை உள்ளடக்கிய பிறகு நீங்கள் தளத்தை தொடர்ந்து அணுகலாம் அல்லது பயன்படுத்தலாம். புதுப்பிக்கப்பட்ட கொள்கையை நீங்கள் ஏற்கவில்லை என்றால், நீங்கள் தளத்தை அணுகுவதை அல்லது பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
12. தொடர்பு கொள்ளுங்கள்
இந்தக் கொள்கை தொடர்பான கேள்விகள், கருத்துகள் மற்றும் கோரிக்கைகள் https://www.tiktok.com/legal/report/privacy என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
அதிகார எல்லைக்கு மட்டுமேயான துணை விதிமுறைகள்
நீங்கள் சேவைகளை அணுகும் அல்லது பயன்படுத்தும் உங்கள் அதிகார வரம்புக்கு பொருத்தமான துணை விதிமுறைகள் - அதிகார எல்லைக்கு மட்டுமேயான விதிமுறைகளுக்கு இடையில் ஒரு முரண்பாடு ஏற்பட்டால், மற்றும் மீதமுள்ள கொள்கை, தொடர்புடைய அதிகார வரம்புகளின் துணை விதிமுறைகள் - அதிகார எல்லைக்கு மட்டுமேயானவை மேலோங்கும் மற்றும் கட்டுப்படுத்தும்.
இந்தியா. நீங்கள் இந்தியாவில் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், தளம் பைட்டான்ஸ் (இந்தியா) டெக்னாலஜி பிரைவேட் லிமிட்டெட் மூலம் வழங்கப்படுகிறது மற்றும் கட்டுப்படுத்தப்படுகிறது. டிக்டாக் சேவைகளை வழங்குவதற்கும் மேம்படுத்துவதற்குமான எங்கள் பிராண்ட் ஆகும். இந்தியாவிலிருந்து இந்த சேவைகளைப் பயன்படுத்தும்போது, பைட்டான்ஸ் (இந்தியா) டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிட்டெட் என்பதைக் குறிக்க இந்த கொள்கையில் “டிக்டாக்”, “நாங்கள்” அல்லது “எங்கள்” ஆகியவற்றை தகுந்தவாறு படிக்கவும்.